"ஓட்டு கேட்கும் கூட்டம் தி.மு.க.வுக்கு தேவையில்லை"


ஓட்டு கேட்கும் கூட்டம் தி.மு.க.வுக்கு தேவையில்லை
x

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் “ஓட்டு கேட்கும் கூட்டம் தி.மு.க.வுக்கு தேவையில்லை” என திருச்சி சிவா எம்.பி. பேச்சினார்.

திண்டுக்கல்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம், சின்னாளப்பட்டியில் இன்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜீவ்காந்தி 'திராவிட இயக்க வரலாறு' என்ற தலைப்பில் பேசினார். பின்னர் திருச்சி சிவா எம்.பி. சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தி.மு.க.வின் கொள்கைகளுக்கு ஏற்ப இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகளை தயார்படுத்த வேண்டும் என்பதற்காகதான் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்படுகிறது.

ஓட்டு கேட்கும் கூட்டம் தி.மு.க. வுக்கு தேவையில்லை. போர் வீரர்களாக திராவிட கொள்கைகளை பறைசாற்றும் செயல்வீரர்கள் மட்டுமே கட்சிக்கு தேவை. மக்களிடம் எப்படி பேச வேண்டும் என அறிஞர் அண்ணா கற்றுக்கொடுத்துள்ளார். எதை பேச வேண்டும் என கலைஞர் கருணாநிதி அறிவுறுத்தினார் என்றார்.



Related Tags :
Next Story