தி.மு.க. திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
தென்காசியில் தி.மு.க. திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
தென்காசியில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி வரவேற்றார். அயலக தி.மு.க. தொடர்பு இணைச் செயலாளர் அப்துல்லா எம்.பி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் கோவி.லெனின் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் தென்காசி நகர செயலாளர் சாதிர், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, அன்பழகன், சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி, முத்தையா, பண்டாரம், அணி அமைப்பாளர்கள் ஜேசுராஜன், பேச்சிமுத்து, உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலாளர் அருணன், வீராணம் ஷேக்முகமது, துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, சுரேஷ், கண்ணன், செல்வம், ஜாகிர் உசேன், அஷ்ரப் அலி, ஜீவானந்தம், விஜயன், இட்லி செல்வம், முத்துப்பாண்டி, மாரியப்பன், மோகன், ஹரி கிருஷ்ணன், முத்து சுப்பிரமணியன், சண்முகநாதன், நகர நிர்வாகிகள் ஷேக் பரீத், பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.