தி.மு.க.முன்னாள் நிர்வாகி கைது


தி.மு.க.முன்னாள் நிர்வாகி கைது
x
திருப்பூர்


திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 37). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனக்கு பாஸ்போர்ட், விசா எடுப்பதற்காக திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த ராஜ்மோகன்குமாரை (55) தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இதற்காக முதல்கட்டமாக ரூ.25 ஆயிரத்தை வினோத், ராஜ்மோகன்குமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு பாஸ்போர்ட் எதுவும் எடுத்துக்கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுதொடர்பாக வினோத், ராஜ்மோகன்குமாரிடம் கேட்டபோது அவர் பணத்தையும் கொடுக்காததுடன் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகன்குமாரை நேற்று கைது செய்தனர்.

ராஜ்மோகன்குமார் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் தி.மு.க.வின் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில் புகார்கள் காரணமாக கடந்த மாதம் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில பொதுச்செயலாளர் அறிவித்தார். இந்தநிலையில், மீண்டும் பாஸ்போர்ட் விவகாரம் காரணமாக நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story