தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெய்வேலி நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில் நடைபெற்றது.
நெய்வேலி,
நெய்வேலி நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் , பேசுகையில், வருகிற ஜூன் 3-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நகர கழகம் சார்பில் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும். வருகிற 5-ந்தேதி நெய்வேலி அண்ணா திடலில் நடைபெற உள்ள தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். ஆகவே நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். வருகிற 7-ந்தேதி கொள்ளுக்காரண்குட்டை வள்ளலார் பள்ளியில் தொழில்துறை மற்றும் தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனின் பெருமுயற்சியால் நடைபெற உள்ள தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாமில் நெய்வேலி தொகுதி இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பைப் பெற கழக நிர்வாகிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நெய்வேலி நகர பெறுப்பாளர் பக்கிரிசாமி, பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நகர செயலாளருமான புகழேந்தி, தொ.மு.ச. பேரவை செயலாளர் வீரராமச்சந்திரன், நகர பெறுப்புக்குழு உறுப்பினர்கள் நன்மாறபாண்டியன், ரவிச்சந்திரன், செந்தில், கருப்பன், முன்னாள் நகர பெருளாளர் நாசர், என்.எல்.சி. முன்னாள் தொ.மு.ச. பெருளாளர் குருநாதன், நெய்வேலி கிளை கழக செயலாளர்கள், தொ.மு.ச. உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.