போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் புகார் மனு


போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் புகார் மனு
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசும்போது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.


Related Tags :
Next Story