தி.மு.க. கொடியேற்று விழா
கீழப்பாவூரில் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. சார்பில் பொங்கல் பண்டிகைைய முன்னிட்டு கட்சி கொடியேற்று விழா, ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் ஊர்வலமாக சென்று 30 இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஊர்வலத்தை பேச்சாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு, சின்னதேர் திடல், பாரதிநகர், ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி ஆகிய கிளைக் கழகங்களில் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.