நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. இளைஞர் அணியினர் பணிகளை தொடங்க வேண்டும் -அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. இளைஞர் அணியினர் பணிகளை தொடங்க வேண்டும் -அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:46 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. இளைஞர் அணியினர் பணிகளை தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. இளைஞர் அணியினர் பணிகளை தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

தெருமுனை பிரசார கூட்டம்

சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் சாயல்குடி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் பேரூர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம் ஒருங்கிணைப்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் கூட்டம் சாயல்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரியத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சாயல்குடி மேற்கு ஜெயபாலன், சாயல்குடி கிழக்கு குலாம் முகைதீன், கடலாடி வடக்கு ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் கிழக்கு பூபதி மணி, முதுகுளத்தூர் மத்திய கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனிக்கோடி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், சாயல்குடி நீர் பாசன சங்கத்தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயல்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம் வரவேற்றார். மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆடுதுறை உத்திராபதி சிறப்புரை ஆற்றினார்.

பணிகளை தொடங்க வேண்டும்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்பாகவே இருந்தது. எந்த ஒரு திட்டமும் மக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கபூர்வமான திட்டங்கள் இல்லை. ஆனால் கடந்த 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயன்படக்கூடிய திட்டங்களை அறிவித்தது மட்டுமின்றி செயல்படுத்தி காட்டியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவே தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் தற்போது இருந்து பணிகளை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், துணைச்செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பாண்டியன், நரிப்பையூர் கோகுலம் மருது பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாவட்ட பிரதிநிதி காமராஜ், புனித ராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியேந்திரன், துணை அமைப்பாளர் நாகரத்தினம், பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் முத்துக்குமரன், ஜான் கிளிண்டன், சாமிக்கண்ணு, மாணவரணி சிவபாலன் உள்ளிட்ட ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story