தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்


தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்
x

பாளையங்கோட்டையில் தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், மாநில தி.மு.க. விவசாய அணி செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல்காதர் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உறுப்பினரும், வடக்கு விஜயநாராயணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான இ.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story