கருணாநிதியின் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
கருணாநிதியின் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
புதுக்கோட்டை
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் நகர தி.மு.க., வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நினைவு தின அமைதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. அண்ணாசிலை அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக கட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் செந்தில் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக நடந்து வந்தனர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story