தி.மு.க. பொதுக்கூட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர தி.மு.க. தொண்டரணி சார்பில் நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் அப்துல்கையூம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல்கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "பா.ஜனதா அரசு இதுவரை ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது. இதனை மறைக்கவே சனாதனம் போன்ற நாடகங்களை நடத்தி மக்ளை திசைதிருப்புகிறது. இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். இதனால் தான் இந்தியாவை பாரத் என மாற்றி உள்ளார். 2024-ம் தேர்தலில் மதசார்பற்ற சக்திகளின் ஆட்சியை இந்தியா கூட்டணி உருவாக்க போகிறது. மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமராக போகிறார். மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைக்க உழைப்போம். அதற்கு மேலப்பாளையம் பொதுக்கூட்டம் தொடக்கமாக அமையும்" என்றார்.
கூட்டத்தில் தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.