தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாடார்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சிவன்பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்.சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன் வரவேற்றார். துணைத்தலைவர் ஜெயராணி தொகுப்புரை ஆற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். மாநில பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, இஸ்மாயில், யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றியச் செயலாளர் சீனித்துரை, மாவட்ட துணை செயலாளர் கனிமொழி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி தலைவர் ராஜன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story