தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

வள்ளியூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக நாங்குநேரி எஸ்.ஏ.வி. பெட்ரோல் பங்க்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை நினைவுகூர்ந்து 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், பஞ்சாயத்து தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன், நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story