உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
நெல்லையில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
நெல்லையில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆளுயுர மாலை அணிவிப்பு
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அவருக்கு நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றார்.
உற்சாக வரவேற்பு
நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா,
பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், கோபி என்ற நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, தி.மு.க. இளைஞரணி செயலளர் வில்சன் மணிதுரை, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன்,
மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், ரவீந்தர் உள்பட திரளானவர்கள் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிருஷ்ணாபுரத்தில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்க பாண்டியன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.