முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
நெல்லை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வள்ளியூர்:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணத்தை நேற்று மாலையில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த பயணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் நெல்லைக்கு வந்தார். வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சபாநாயகர் அப்பாவு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை மாவட்ட எல்கையான காவல்கிணறு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தி.மு.க.வினர் கட்சி கொடியுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து நெல்லை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் கவுசானல்புரம் 4 வழிச்சாலையில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ஒன்றிய செயலாளர்கள் கிரகாம்பெல் (வள்ளியூர் வடக்கு), ஜோசப் பெல்சி (ராதாபுரம் மேற்கு), வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், பணகுடி நகர பஞ்சாயத்து தலைவர் தனலெட்சுமி தமிழ்வாணன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதி மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், ஒன்றிய கவுன்சிலர்கள் அகஸ்டின் கீதராஜ், மீனா சுப்பையா, ராஜா, ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிதாஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தாமஸ் அமிர்தராஜ், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, கடையநல்லூர் நகரசபை தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜன், கடையநல்லூர் சுப்பம்மாள் பால்ராஜ், ஒன்றிய குழு துணை தலைவர்கள் ஐவேந்திரன் தினேஷ் (கடையநல்லூர்), கனகராஜ் முத்துப்பாண்டி (தென்காசி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.