தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா- அமைச்சர்கள் பங்கேற்பு


தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா- அமைச்சர்கள் பங்கேற்பு
x

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

மதுரை


மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தி.மு.க. மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

நூற்றாண்டு விழா

தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமை குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மற்றும் மூத்த கழக உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி கருப்பாயூரணி பகுதியில் உள்ள துவாரகா பேலசில் நடந்தது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏவும் ஆதி திராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளருமான வி.பி.ராஜன், மானாமதுரை நகர் மன்ற தலைவரும், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளருமான எஸ்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் வரவேற்றனர்.

பொற்கிழி

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், முன்னாள் அமைச்சரும், மாநில துணை பொதுசெயலாளருமான அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 100 மூத்த கழக உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து காலத்தை வென்றவர் கருணாநிதி என்ற தலைப்பில் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது. இதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாஞ்சில் சம்பத், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மாநில துணை செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story