தமிழ் மொழியை திமுக அரசு வளர்க்கவில்லை - அண்ணாமலை
தமிழ் மொழியை திமுக அரசு வளர்க்கவில்லை .தாய் மொழியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது .
சென்னை,
சென்னை, அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது ;
தமிழ் மொழியை திமுக அரசு வளர்க்கவில்லை .தாய் மொழியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது .காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி திணிப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உண்மை நிலவரம் காட்டப்படவில்லை
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை.ரஜினிகாந்த் பற்றி ஆணையம் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம், இந்த கருத்து தவறான முன்னுதாரணம்.என கூறினார்.
Related Tags :
Next Story