தி.மு.க. பிரமுகரை அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த பெண் கவுன்சிலரின் கணவர் கைது


தி.மு.க. பிரமுகரை அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த பெண் கவுன்சிலரின் கணவர் கைது
x

தி.மு.க. பிரமுகரை அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த பெண் கவுன்சிலரின் கணவர் கைது

திருவாரூர்

கூத்தாநல்லூரில், தி.மு.க.பிரமுகரை அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க. பிரமுகர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜ்ஜியா தெருவை சேர்ந்தவர் அனஸ் மைதீன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். கூத்தாநல்லூர் குனுக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(45). இவர், கூத்தாநல்லூர் நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பிரவிணாவின் கணவர் ஆவார்.

அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர்.

வாட்ஸ் அப்பில் பதிவு

இதுகுறித்து முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனாலும் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து வாட்ஸ்-அப் குரூப்பில் அனஸ் மைதீன் குறித்து பதிவிட்டு வந்ததாகவும், பதிலுக்கு அனஸ் மைதீனும் பதிவிட்டு வந்துள்ளதாகவும் தெரிகிறது. அப்போது இருவரும் செல்போனில் கோபமாக பேசி வாய்த்தகராறு செய்து கொண்டது நீடித்தது.

கைது

நேற்று முன்தினம் கூத்தாநல்லூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு முத்துகிருஷ்ணன் கையில் அரிவாளுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அனஸ் மைதீனை, முத்துகிருஷ்ணன் அரிவாளை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனை பார்த்த மற்ற தி.மு.க. பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வ


Related Tags :
Next Story