தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தி.மு.க. சாதனை படைத்து வருகிறது-கி.வீரமணி பேட்டி


தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தி.மு.க. சாதனை படைத்து வருகிறது-கி.வீரமணி பேட்டி
x

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தி.மு.க. சாதனை படைத்து வருகிறது என்று கி.வீரமணி கூறினார்.

தென்காசி

தென்காசி:

திராவிட கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை குற்றாலத்தில் 3 நாட்கள் நடந்தது. இதன் இறுதி நாளான நேற்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பெரியாரியலுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, 21 மொழிகளில் பெரியாரின் எண்ணங்களை, திட்டங்களை கொண்டு சென்றுள்ளது. நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய செயல் உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், எண்ணெய் போன்றவற்றை அளிக்கும் வளைகுடா நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பா.ஜ.க. தலைவர்கள் கண்டிக்கவில்லை. இதில் இருந்தே பா.ஜனதாவினர் தான் இதை தூண்டி இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விலைவாசி பட்டியலை வெளியிட்டுவிட்டு ஊழல் பட்டியலை வெளியிடட்டும். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றும் என்று கூறுகிறார். ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால் இது பகலில் கனவு காண்பது போன்றதாகும். தமிழகத்தில் தி.மு.க. அரசு கல்வித் துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திராவிட கழக மாநில துணைத்தலைவர் கலி பூங்குன்றனார், பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், தென் மண்டல பிரசார குழு செயலாளர் டேவிட் செல்லதுரை, தென்காசி மாவட்ட தலைவர் வீரன், தொழிலதிபர் ராஜா, தி.மு.க. அமைப்புசாரா தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் பேச்சிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story