ஆனைமலையில் தி.மு.க. சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

ஆனைமலையில் தி.மு.க. சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
ஆனைமலை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கோவை தெற்கு மாவட்ட கழகம் மற்றும் ஆனைமலை ஒன்றியத்தின் சார்பாக ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ நர்சிங் மற்றும் அனைத்து பட்டப்படிப்புகளும் முடித்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மாணவ -மாணவிகளை தேர்வு செய்தன. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். எம்.பி.சண்முகசுந்தரம், ஆனைமலை ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆனைமலை பேரூர் கழகச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். இதில், பேரூராட்சி தலைவர்கள் கலைச்செல்வி, ரேணுகாதேவி கவுன்சிலர் அபுதாஹிர், இளைஞரணி முகமது நபிஸ் மற்றும் ஓடையகுளம் மோகன் குமார், ஊராட்சி தலைவர்கள் கலைவாணி, சிலம்பரசன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார் நன்றி கூறினார்.