கோவையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர்
கோவை,
தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோன்று அனைத்து மகளிர்களுக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும், விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story