மதுரையில் தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்


மதுரையில் தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x

மதுரையில் தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியில் உள்ள சேடபட்டியார் திடலில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நடந்தது. தொகுதி பொறுப்பாளர்கள் சாயல்குடி ராமர், மாரியப்பன் கென்னடி, இலக்குவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ. தளபதி, அவை தலைவர் நாகராஜன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்புடன் செயல்படுத்த வேண்டும், டிசம்பர் 17-ல் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் சிறப்புடன் நிர்வாகிகள் களப்பணி ஆற்ற வேண்டும், வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெறும் நாட்களில் கழக நிர்வாகிகள் வாக்குச்சாவடிகளில் களப்பணியாற்ற வேண்டும் போன்றவை பேசப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் பேசியதாவது, விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கூட்டுறவு தேர்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம். எனவே கூட்டுறவு தேர்தலுக்காக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பாக முகவர்கள் முழுமையாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முழு வெற்றியை பெற வேண்டும். கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த போதே திருமங்கலம், திருப்பரங்குன்றத்தில் எதிரணியை காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்றோம். இந்த முறை மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் முழு வெற்றி பெற வேண்டும். விருதுநகர், தேனி நாடாளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்பான ஆட்சிக்கு நற்சான்று அளிக்கும் விதமாக தி.மு.க. வெற்றி அமைய வேண்டும் என்றார். முன்னதாக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவிடத்தில் மணிமாறன் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.


Next Story