'நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்'-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
x
தினத்தந்தி 17 July 2023 12:30 AM IST (Updated: 17 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்’ என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி

'நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்' என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

பாக முகவர்கள் கூட்டம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று காலை நடந்தது.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

வெற்றி

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி நடைபெறும் பாக முகவர்கள் கூட்டம் முக்கியமானது. இந்த தேர்தல் களத்தில் தங்களது பகுதியில் பணியாற்றக்கூடிய கட்சியின் ஆனிவேராக இருப்பவர்கள் நீங்கள் தான். உங்கள் பகுதியில் யார் குடியிருக்கிறார்கள், யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் உங்களுக்கு தான் தெரியும். தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் என ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. இதை அனைவரும் முறையாக பின்பற்றி அந்த பட்டியலை சரிபார்த்து மக்கள் பணியை முறையாக செய்ய வேண்டும். அதேபோல் வாக்குச்சாவடி இடம் தூரமாக இருந்தால், அருகில் மாற்று இடம் இருந்தால் அதனை தெரிவித்தால் மக்களின் வசதிக்கேற்ப அதை அதிகாரிகளிடம் முறையாக தெரிவித்து மாற்று ஏற்பாடு செய்யப்படும். 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கட்சி பணியை திட்டமிட்டு முறையாக பாக முகவர்கள் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தல், நமக்கு தளபதியார் கூறியது போல் முக்கியமான தேர்தல். அந்த இலக்கை அடையும் வரை உறுதியுடன் பணியாற்றி இறுதி வெற்றியை கைப்பற்ற அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யார்-யார்?

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் நாகராஜன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story