தி.மு.க. முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும்


தி.மு.க. முப்பெரும் விழாவில்  திரளாக பங்கேற்க வேண்டும்
x

விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தோன்றிய நாள், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பேரறிஞர் அண்ணா நகர் டாக்டர் கலைஞர் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

கடந்த 6-ந் தேதி நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரளாக பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர். எனவே அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story