விருதுநகரில் தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்


விருதுநகரில் தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் கலவரம்

மத்திய அரசு ஆளும் மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உத்தரவிட்டார்.

அதன்படி விருதுநகர் தேசபந்துதிடலில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சரஸ்வதி, தெற்கு மாவட்ட தலைவர் சுமதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் கடந்த 70 நாட்களாக நடந்து வரும் வன்முறையை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், ராஜபாளையம் நகரசபை தலைவர் பவித்ராஷ்யாம், சீனிவாசன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட மாணவரணி தலைவர் ராஜகுரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story