தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்


தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
x

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தினார்.

சென்னை,

தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, அண்மையில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

முதல்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் மண்டலம் 1-க்கு உட்பட்ட சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை வடக்கு மாவட்டங்களில் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இன்றும் நடைபெறுகிறது

நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் ஆதார் அட்டை, தி.மு.க. உறுப்பினர் அட்டை, பள்ளிச் சான்றிதழ், கட்சியில் இளைஞரணி உள்ளிட்ட பிரிவுகளில் ஏற்கனவே பணியாற்றி இருந்ததற்கான புகைப்பட தொகுப்புகளை ஆல்பமாக தயார் செய்தும் கொண்டு வந்திருந்தனர்.

நேர்காணலின் போது தூத்துக்குடி எஸ்.ஜோயல், க.பிரபு, ப.அப்துல்மாலிக், கு.பி.ராஜா, நா.இளையராஜா, கே.இ.பிரகாஷ் உள்ளிட்ட தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

சென்னை தெற்கு, சென்னை வட கிழக்கு, சென்னை தென்மேற்கு தி.மு.க. மாவட்டங்களுக்கான இளைஞரணியிருக்கு இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெற உள்ளது.

மகிழ்ச்சி

இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.விற்கு வலுசேர்க்க கொள்கைமிகு இளைஞர்களை வளர்த்தெடுத்து வரும் தி.மு.க. இளைஞர் அணியின் மண்டலம் 1-க்கு உட்பட்ட சென்னை கிழக்கு-மேற்கு -வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கான பகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை அன்பகத்தில் நடத்தினோம்.

தி.மு.க. கட்சிப் பணியில் ஆர்வமும் அனுபவமும் நிறைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நேர்காணலில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story