"நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதியே திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது!"- அமைச்சர் சேகர் பாபு


நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதியே திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது!- அமைச்சர் சேகர் பாபு
x

நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதியே திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சட்டமன்ற அறிவிப்பில் 34 திட்டங்கள், 26 சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை துறையின் மாணிய கோரிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்திருந்தோம்.

அந்த தொகுதிகளில் பூங்காக்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள் அமைப்பதில் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பூந்தமல்லியில் விளையாட்டு மைதானம், ஆவடியில் புதிய வகுப்பறை, மதுரவாயலில் புதிதாக பூங்கா அமைப்பதற்காக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

விரைவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இந்த பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

கலைஞர் காலத்தில் இருந்தே ஒன்றிய அரசை பொறுத்தவரையில் உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தில் தான் இயங்கி வருகின்றோம்.

டெல்லியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற திறப்புவிழாவில் ஜனாதிபதியை வைத்து தான் திறக்கவேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. நாட்டில் உயரிய பதவியில் இருக்கின்றவரே கட்டிடத்தை திறந்துவைப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பது முதல் அமைச்சரின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story