தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கல்


தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கல்
x

தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன.

அரியலூர்

அரியலூர் மாவட்ட தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தலில் ஒன்றிய கழக பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். பின்னர் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அதனை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார்.

1 More update

Next Story