காட்டுமன்னார்கோவிலில் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


காட்டுமன்னார்கோவிலில்    கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x

காட்டுமன்னார்கோவிலில் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதியழகன், அப்பு சத்யநாராயணன், வெற்றிச்செல்வன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், என்ஜினீயருமான கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில், இளைஞர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் கடின உழைப்பால் தான் நாம் பல்வேறு பதவிகளை அடைந்து வருகிறோம். கட்சிக்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்கின்றவர்களை மட்டுமே முதல்-அமைச்சருக்கு ரொம்ப பிடிக்கும். எனவே இளைஞர்களாகிய நீங்கள் கிராமப்புறங்களுக்கு சைக்கிளில் சென்று பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுத் தர வேண்டும். இளைஞர் அணி சார்பில் அதிகளவு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் 3 ஒன்றியங்களுக்கும், கட்சிக்காக அதிகளவு வளர்ச்சி நிதி திரட்டுபவர்களுக்கும் என் சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் பரிசு வழங்க ஏற்பாடு செய்வேன் என்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சபாநாயகம், மதியழகன், மனோகர், சோழன், கடலூர் மாநகர செயலாளர் ராஜா உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரத்திகள் கலந்து கொண்டனர்.முடிவில் காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story