முகையூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


முகையூர் ஒன்றிய    தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முகையூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த முகையூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலம்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு முகையூர் ஒன்றிய தி்.மு.க. செயலாளர் கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய அவைத்தலைவர் காத்தவராயன், துணை செயலாளர் லூயிஸ், பொருளாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார்.

கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்பது குறித்தும், வாக்குச்சாவடி முகவர்கள் பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் ஜீவானந்தம், வீரமணி, கருணாநிதி, ஏ.வி.ராஜேந்திரன், ஜனா, கார்த்தி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோபால் நன்றி கூறினார்.


Next Story