தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் கரூர் முரளி கலந்துகொண்டு ேபசினார். கூட்டத்தில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது, 'கோஷ்டி சண்டையில் அ.தி.மு.க. அழிந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. இல்லாத இடத்துக்கு பா.ஜனதா வந்துவிடக்கூடாது. இதனை தி.மு.க. உணர்ந்துள்ளது. பா.ஜனதாவை உள்ளே நுழைய விடக்கூடாது' என்றார். இதில் கொரடாச்சேரி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் கலியபெருமாள், தட்சிணாமூர்த்தி, கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story