தி.மு.க. ஆலோசனை கூட்டம்


தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு தி.மு.க. ஒன்றிய தி.மு.க. பாக முகவர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கற்பகம் நீலமேகம் அவைத்தலைவர் ராஜமாணிக்கம், துணை செயலாளர்கள் ரவி, அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் ஆதிரவி, ஆரோக்கியம், மச்சழகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளிலும் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துதல், பூத் கமிட்டி அமைத்தல், வருகிற ஜூன் 3-ந் தேதி திருவாரூரில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் திரளான பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story