ஆலங்குளத்தில் தி.மு.க. கூட்டம்
ஆலங்குளத்தில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
ஆலங்குளம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆலங்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது சம்பந்தமாகவும், பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் உள்பட பல்வேறு அணி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.