அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

நெல்லையில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா நியமிக்கப்பட்டார். இவர் சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று நெல்லைக்கு வந்தார். அவருக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ரெயில் நிலையத்திலிருந்து நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலைராஜா தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன், தி.மு.க. மாநகர செயலாளர் தச்சை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story