தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
கல்வராயன்மலை ஒன்றியத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை ஒன்றிய தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சேராப்பட்டு கிராமத்தில் மாவட்ட செயலாளர் உதயசூரியன் ஆலோசனைப்படி நடைபெற்றது. இதற்கு கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, அவைத்தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் வரவேற்றார். இதில் கல்வராயன்மலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் பாட்ஷாபி ஜாகிர் உசேன், மாவட்ட பிரதிநிதி இன்னாடு அறிவுக்கரசு, ஒன்றிய துணை செயலாளர்கள் பிச்சன் நாட்டார், கரியாலூர் ரபிக், மாவட்ட பிரதிநிதி ஆரம்பூண்டி இன்பராசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரத்தினம், பொருளாளர் அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனுவாசன், ஆண்டி, குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.