தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 10 April 2023 7:00 PM GMT (Updated: 10 April 2023 7:00 PM GMT)

பெரும்பாறையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

திண்டுக்கல்

ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாறையில், தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமன முகாம் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வாக்குச்சாவடி முகவர்கள் அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான மணலூர் ஊராட்சி பொறுப்பாளர்கள் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் முருகன், துணை அமைப்பாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் மணலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுருளிராஜன், தி.மு.க. நிர்வாகி செல்வக்குமார் மற்றும் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர்.நகர், கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, வெள்ளரிக்கரை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story