தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன், தொகுதி பொறுப்பாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், கவுன்சிலர் தனவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில், அன்பழகன், துணைத்தலைவர் நாகஜோதி பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி முனுசாமி, கட்சி நிர்வாகிகள் கருணாநிதி, மணிமுத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story