தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
நெல்லை தச்சநல்லூரில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
பேட்டை:
நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டு காந்தி சிலை முன்பு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி துணை மேயருமான கே.ஆர்.ராஜூ, 13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டாக்டர் சங்கர், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு மீரான் ஜெய்லானி ஆகியோரின் ஏற்பாட்டில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நெல்லை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார், பாளையங்கோட்டை சட்டமன்ற பொறுப்பாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான ஹெலன் டேவிட்சன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் தர்மர், மண்டல சேர்மன் மகேஸ்வரி, பகுதி செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.