கரூர் மாவட்ட தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கரூர் மாவட்ட தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டாடினர்.
கரூர்
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்ததுடன், இனிப்புகளும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் சுப்பிரமணியன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, கவுன்சிலர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story