69 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி


69 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் 69 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஏற்றினார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்:

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட 69 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதி்ல் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து, 69 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அசகளத்தூர் கலியன், முடியனுர் சுப்பு இளங்கோவன், வேளாக்குறிச்சி ராணி எத்திராசு, இளைஞரணி நிர்வாகி பொரசக்குறிச்சி வி.எஸ்.மணி, மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், மடம் பெருமாள், பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணை தலைவர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story