தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
பாவூர்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் தண்ணீர், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றியச்செயலாளர் க.சீனித்துரை தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் காவேரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், தொழிலதிபர் சேவியர்ராஜன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணை செயலர் சிவஅருணன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேஷ், நிர்வாகிகள் வைத்தீஸ்வரி, ஷாலிமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story