தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா


தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மற்றும் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் காளி, நகர துணைச்செயலாளர்கள் ஜோதிமணி, ராஜா, கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் ஆபத்துக்காத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பொதுக்குழு உறுப்பினர் ரஹீம் வரவேற்று பேசினார்.

விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா ஆகியோர் கலந்து கொண்டு நலத்த்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். கழக பேச்சாளர்கள் ஆயிரப்பேரி முத்துவேல், செங்கை குற்றாலிங்கம், வெல்டிங் மாரியப்பன் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story