தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்


தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில்  இந்தி திணிப்புக்கு எதிராக ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
x

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி


மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும், ஒரே நுழைவுத்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனியில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்காக தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் தி.மு.க.வினர் திரண்டனர். அங்கிருந்து இந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடி மதுரை சாலையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டு இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி நகர செயலாளர் நாராயணபாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக நேரு சிலை சிக்னல் பகுதியில் தி.மு.க.வினர் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.


Related Tags :
Next Story