பரமக்குடியில், தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம்
இந்தி திணிப்புக்கு எதிராக பரமக்குடியில், தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். பரமக்குடி பஸ் நிலையம், ஐந்து முனை, ஆர்ச் உட்பட பல்வேறு பகுதிகளில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிராக முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக். சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போகலூர் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையிலும் அவை தலைவர் அப்பாஸ் கனி, பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பூமிநாதன், பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மஞ்சூர் கனகராஜ், ரவி, கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது. போகலூர் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கதிரவன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னாள் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமக்குடி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலும், பரமக்குடி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பார்த்திபனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.