தி.மு.க. ஊராட்சி துணைத் தலைவருக்கு கத்திக்குத்து


தி.மு.க. ஊராட்சி துணைத் தலைவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 19 April 2023 1:19 AM IST (Updated: 19 April 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே தி.மு.க. ஊராட்சி துணைத் தலைவரை கத்தியால் குத்திய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே தி.மு.க. ஊராட்சி துணைத் தலைவரை கத்தியால் குத்திய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊராட்சி துணை தலைவர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குட்டி புலி என்கிற ராஜேந்திரன் (வயது 65). தி.மு.க.வை சேர்ந்த இவர், பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும்,2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

நேற்று இரவு 7 மணி அளவில் ராஜேந்திரன் பட்டீஸ்வரம் கடைத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உறவினர் ஒருவருக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த உறவினர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டீஸ்வரம் போலீசார் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜேந்திரனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரனுக்கும், கத்தியால் குத்திய உறவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

உறவினருக்கு வலைவீச்சு

இந்த முன்விரோதம் காரணமாக ராஜேந்திரனை அந்த உறவினர் கத்தியால் குத்தியது தெரிய வந்தது. தப்பி ஓடிய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story