நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை-ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆடம்பர நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் எளிமையாக அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி அறிவித்திருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் கட்சி நிர்வாகிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி, சப்தகிரி கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முத்துலட்சுமி, பொன்மகேஸ்வரன், ரவி, காசிநாதன், ராஜா, குமார், நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவல்லி ரவி, சுருளிராஜன், கனகராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், மாதேஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






