தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை


தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை
x

பாளையங்கோட்டையில் தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தியாகி விசுவநாததாஸ் 138-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தியாகி விசுவநாததாஸ் தேசிய பேரவை தலைவர் சுரேஷ் முத்துராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல்லப்பா முன்னிலை வகித்தார். செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட தியாகி விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஏழை, எளியோருக்கு அரிசி, பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன், வக்கீல் செல்வ சூடாமணி, மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story