தி.மு.க. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


தி.மு.க. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x

தி.மு.க. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ,, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஆர்.ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவிலேயே ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தல் நடத்துவது தி.மு.க.மட்டும் தான். நானே மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் நிர்வாகிகள் ஒன்றுபட்டு ஒற்றுமையோடு தேர்தலை நடத்தியுள்ளனர்.

விழிப்புணர்வு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த 15 மாதத்தில் தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து மக்களிடையே நீங்கள் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தங்கம், வேம்பிரவி, கல்பட்டு ராஜா, முருகன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, முருகவேல், விசுவநாதன், பிரபாகரன், கணேசன், வளவனூர் நகர செயலாளர் ஜீவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஸ்ரீ வினோத், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோல்டு வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story