தி.மு.க. சார்பு அணிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்


தி.மு.க. சார்பு அணிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தெரிவித்துள்ளார்

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைமை கழகத்தில் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பட்டியலை வருகிற 30-ந்தேதிக்குள் கேட்டுள்ளார்கள். அதுபோன்று ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் அனைத்து அணிகளுக்கும் பொறுப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமித்து பட்டியலை வழங்கும்படி கேட்டுள்ளார்கள். எனவே ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட அளவில் நியமிக்கப்பட இருக்கிற பொறுப்புகளுக்கும், ஒன்றிய, நகர, பேரூர் அளவில் நியமிக்கப்பட இருக்கிற பொறுப்புகளுக்கும் அனைத்து அணிகளுக்கும் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பட்டியலை வருகிற 25-ந்தேதிக்குள் வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மருத்துவர் அணிக்கு தலைவர், துணைத்தலைவர் பட்டியல் கிடையாது. தகவல் தொழில்நுட்ப அணிக்கும், இளைஞர் அணிக்கும் தலைவர், துணைத் தலைவர் கிடையாது. ஒன்றிய அளவில் நியமிக்கப்பட இருக்கிற அணிகளில் அமைப்பாளர் ஒருவரும், துணை அமைப்பாளர்கள் 5 பேரும், நகர அளவில் அதேபோலவும், பேரூர் அளவில் ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் என்கிறபடி வழங்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மகளிர் அணி சார்பில் 2 வலைதள பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் பட்டியல் வழங்கிட வேண்டும். எனவே ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமித்து தங்களது லெட்டர் பேடில் பட்டியலை வழங்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் கழகத்தில் பொறுப்பு வேண்டும் என்கிற விருப்பமுள்ளவர்களும் மாவட்ட கழகத்தில் விருப்ப மனு வழங்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story