தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சோமாசிபாடியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியம் சோமாசிபாடி பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளரும், கீழ்பென்னாத்தூர் தொகுதி பொறுப்பாளருமான இசை முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கி பேசினார்.
அப்போது, தி.மு.க.வில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதிக்குள் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிர்வாகியும் போட்டி போட்டுக் கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்த்து மாவட்டத்திலேயே கீழ்பென்னாத்தூர் தொகுதி முதலிடம் பெறும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, ராமஜெயம், மாரிமுத்து, ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் பரசுராமன், இளம்பரிதி, பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா,
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பிரபாகர், ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர்கள் தண்டபாணி, சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள் சம்பத், குப்புசாமி, தேவேந்திரன், வரதராஜன்,
நகர செயலாளர்கள் அன்பு, முருகையன், ஏரி நீர்பாசன சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன், கிளை செயலாளர் சுதாகர், ஓய்வு பெற்ற ஆசிரியர் கலீல்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கிளை செயலாளர் அரிபாலன் நன்றி கூறினார்.