பா.ஜ.க.வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பியபோது தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் செருப்பு வீசிய சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் முன்னிலையில், தகவல் தொழில்நுட்ப அணியினர் ஊர்வலமாக புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பா.ஜ.க.வினரை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story